ஆப்கன் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

காபூல்:

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளில் 2 பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் இந்திய தூதரகத்திற்குள் நுழைய முற்பட்டபோது, அதனை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை முறியடித்தது, பின்னர் அங்கு ஆப்கானிஸ்தான் படை விரைந்தது. பயங்கரவாதிகள் இந்திய தூதரகம் அமைந்து உள்ள இடத்தில் வீடு ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, பின்னர் மறைமுகமாக இந்திய தூதரகம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.