பாகுபலியாக தன்னை ரசித்த டிரம்ப்! டிவிட்டரில் போட்டு சாத்துகிறார்..!

அடடே... அப்படியா? இந்தியா உலகம் லைஃப் ஸ்டைல்
trump bahubali style - 2026

பாகுபலியாக சாகசங்களில் தனது முகத்தை ஒட்ட வைத்து மார்பிங் செய்யப் பட்ட வீடியோக்களை டிவிட்டர் பக்கத்தில் பார்வர்ட் செய்து, தான் ரசித்ததை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

தன்னை பற்றி மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை டுவிட்டரில் ரிட்வீட் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதனை வரவேற்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார். நாளை மதியம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்துக்கு வரும் அவர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து உரை நிகழ்த்துகிறார். பின்னர், சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிடும் அவர் பின்னர் தில்லிக்கு வருகிறார்.

தில்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் டிரம்ப், அமெரிக்கதூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் நாடு திரும்புகிறார்.

https://twitter.com/Solmemes1/status/1231326273894526976

இதனிடையே, டிரம்ப் வருகையை முன்னிட்டு, பாகுபலி படத்தை மார்பிங் செய்து டிரம்ப் தோன்றுவது போல் சில வீடியோக்களை உருவாக்கி, இந்திய அமெரிக்க நட்புறவு பலப்படட்டும் என்று கருத்துப் பதிவிட்டு, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோக்களை வெகுவாக ரசித்துள்ளார் டிரம்ப். இந்த வீடியோக்களில், டிரம்ப், அவரது மனைவி, மகள், மகன் என முகங்களை இணைத்து, வீரசாகசம் புரியும் நபராக டிரம்பை சித்திரித்துள்ளனர். இதனை வெகுவாக ரசித்து ரிட்வீட் செய்துள்ளார் டிரம்ப்.

https://twitter.com/Solmemes1/status/1220341130493153283

மேலும், இந்தியாவில் உள்ள எனது நண்பர்களை காண ஆவலாக உள்ளேன் என அதில் கருத்தும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.