புது தில்லி: வட இந்தியாவில் இப்போதே வெயில் கொளுத்தி எடுக்கத் துவங்கியுள்ளது. வெயில் உக்கிரத்தால் பல இடங்களில் தீ எரிவது போல் கனல் கக்குகின்றது. இது நாசாவின் புகைப்படங்களிலும் எதிரொலித்துள்ளது. கடந்த 10 நாட்களில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவதுபோல் சிவப்புப் புள்ளிகளாகத் தெரிகின்றன.
இந்த சிவப்பு நிறத் தீப் புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங் கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டைக் காட்டுவதாகவும் இருக்கலாம். அல்லது, அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
நாசா வெளியிட்டுள்ள படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன.
நாசா கோடர்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் செண்டரின் விஞ்ஞானி ஹிரேன் ஜேத்வா இது குறித்துக் கூறியபோது, மத்திய இந்தியாவில் காணப்படும் இந்த சிவப்புப் புள்ளிகளானது தெளிவாகத் தெரிகிறது. இவை பெரும்பாலும் காய்ந்த பயிர்களை எரிப்பதால் தெரியும் தீயாக இருக்கும். காட்டுத் தீ என்றால் அதிகம் புகை மூட்டமும் தீ பரவலாக்கமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காட்டுத் தீ என்றால், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு கூடும். புகை மண்டலமாகும். ஆனால், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளே விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன.
பாவம௠விவசாயிகளà¯!