ஈரானின் சபாஹர் துறைமுக நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது இந்தியா!

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
iran chabahar port - 2026
ஈரானில் இந்திய நிதி உதவியில் அமைந்த சபாஹர் துறைமுக திறப்பு விழாவில்…

பாகிஸ்தானின் நிலத்தை பயன்படுத்தாமல், கடல் வழியாகக் கடந்து சென்று ஈரான், ஆப்கன் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொழில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா கட்டமைத்த ஈரானின் சாபஹர் துறைமுக நிர்வாகத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்காக இந்திய அரசால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம்

ஈரான் அதிகாரிகள் துறைமுகத்தின் பொறுப்புகளை

ஒப்படைத்தனர்.

பாகிஸ்தான் எல்லையைத் தொடாமல் கடல் வழியாக ஆப்கானுக்கு இந்திய கப்பல்கள் செல்ல இது வழி செய்கிறது. யூரியா, மெத்தனால், தார், இரும்பு, ரசாயனங்கள் உள்ளிட்ட

பொருட்களை ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கூடுதல்

கட்டணமின்றி இந்தப் பாதை வழியாக ஏற்றுமதி செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு.

இதற்கு பதிலாக, இந்தியாவில் இருந்து அரிசி, தேயிலை, கார்பன், காகிதம், அலுமினியம் ஆக்சைட், மருந்துகள் போன்றவை ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.