பாமக., வேட்பாளர்களின் முதல் பட்டியல்!

Published:

RAMADAS 2 1
RAMADAS 2 1

அ.தி.மு.க.,, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்ட்டுள்ளது.

அ.தி.மு.க, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்னபாக தொகுதிகளை பங்கீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து முதற்கட்டமாக 10 இடங்களில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தல் – 2021
பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்:

வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்

வரிசை எண் தொகுதி எண் & பெயர் வேட்பாளர் பெயர்

1.58. பென்னாகரம் திரு. ஜி.கே.மணி, அவர்கள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

2.129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம், அவர்கள், பொருளாளர், பா.ம.க

3.64. கீழ்ப்பென்னாத்தூர் திரு. மீ.கா. செல்வக்குமார் எம்.ஏ, அவர்கள், மாநில அமைப்பு செயலாளர்.

4.33. திருப்போரூர் திரு. திருக்கச்சூர் கி. ஆறுமுகம் பி. எஸ்.சி, அவர்கள், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மாநில துணைப் பொதுச்செயலாளர்.

5.150. ஜெயங்கொண்டம் வழக்கறிஞர். கே. பாலு, பி.காம், பி.எல் அவர்கள் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர்

6.42. ஆற்காடு திரு. கே.எல். இளவழகன் டி.எம்.இ அவர்கள், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

7.50. திருப்பத்தூர் திரு. டி.கே. ராஜா அவர்கள், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மாநில துணைப் பொதுச்செயலாளர்,

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

8.59. தருமபுரி திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பி.எஸ்.சி அவர்கள், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

9.88. சேலம் மேற்கு திரு. இரா. அருள் பி.எஸ்.சி அவர்கள், மாநில துணைப் பொதுச்செயலாளர்,

10.70. செஞ்சி திரு. எம்.பி.எஸ். இராஜேந்திரன், அவர்கள், மாநில துணை அமைப்புச் செயலாளர்

Related articles

Recent articles

spot_img