மாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jagan-in-tirumalai
jagan-in-tirumalai

உலகத்தை நடுங்க வைக்கும் கொரோனா தொற்று நோயின் பின்னணியில் மக்கள் மிகவும் கவனமாக நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று செலிபிரிட்டிகளும் அரசியல் தலைவர்களும் பல பிரமுகர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.

செய்தியிலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்கு சோஷல் மீடியாவிலும் அறிவுரைகளையும் அறிவுறுத்தல்களையும் அளித்து வருகிறார்கள். ஆனால் அவ்வாறு நிபந்தனைகளை கடைபிடித்து கவனமாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய முதல்வர் ஜெகன் நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டார். அதிலும் ஆந்திராவில் கொரோனா கோரத் தாண்டவமாடுகிறது.

இப்போதே ஜெகனுடைய மிகவும் நெருக்கமான விஜயசாயி ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணம் அடைந்துள்ளார். இவ்வாறு கூறிக் கொண்டே போனால் ஆந்திராவில் 10க்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பரவியது பற்றி கூற வேண்டிவரும்.

இத்தனை நடந்து வந்தாலும் ஜகனில் துளிக்கூட மாற்றம் வரவில்லை. முதல்வர் மட்டும் மாஸ்க் அணியாமல் இருப்பது ஏன் என்று விமர்சனங்கள் எழுகின்றன. இப்போது ஆந்திராவில் ஜெகன் திருமலை பயணம் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட ஜகன் என் ரூட் செப்பரேட் என்பதாக நடந்து கொள்கிறார்.

ஜகன் தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேராக ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி, எம்எல்ஏக்கள் ரோஜா, பூமன கருணாகர ரெட்டி ஆகியோர் பெரும் வரவேற்பு அளித்தார்கள்.

கருணாகர ரெட்டி தவிர மீதி இருவரும் மாஸ்க் அணியாமலே போட்டோக்களுக்கு சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்தார்கள். ரேணிகுண்டா வில் இருந்து நேராக ஜெகன் திருமலை வந்தடைந்தார். அங்கு கூட அதே நிலைமை. திருமலையில் கூட ஜகன் முகத்தின் மீது மாஸ்க் காணப்படவில்லை.

jagan-amitshah
jagan-amitshah

மக்கள் பிரதிநிதிகள் ஜகனை மகிழ்ச்சி அடையச் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்களே தவிர எங்கும் கூட கோவிட் நிபந்தனைகளை கடைபிடிக்கவில்லை. இப்போதைக்கே டிக்ளரேஷன் பற்றிய விவாதம் பெரிதாக எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட ஜெகன் வழிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல செவ்வாயன்று ஜெகன் தில்லி சென்றார். அங்கு கூட ஜகனின் நடைமுறை இவ்வாறே இருந்தது. மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அந்த பேட்டியிலும் அமித் ஷா, ஜகன் இருவருமே மாஸ்க் கட்டியிருக்கவில்லை. மேலும் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள் என்று மக்களிடம் விமர்சனம் எழுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.