ஆன்லைன் அப்ளிகேஷனில் கடன் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

கிரைம் நியூஸ்

சென்னையில் வசித்து வந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரொனா காலக்கட்டத்தில் சிரமம் ஏற்படவே கையில் உள்ள பணத்தைக் கொண்டு செலவழித்துள்ளார். 

71cf29491368ddc572cd64d09148d075 - 2026

சென்னையில் வசித்து வந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரொனா காலக்கட்டத்தில் சிரமம் ஏற்படவே கையில் உள்ள பணத்தைக் கொண்டு செலவழித்துள்ளார்.  ஆனால் பணம் இல்லாமல் போகவே ஆன்லைன் அப்ளிகேசன் மூலம் சில முயற்சிகள் எடுத்துள்ளார்.

ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் அவர் 20  ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அப்போது, ரூ.7000 வட்டியுடன் அடுத்த ஏழு நாட்களில் திரும்பச் செலுத்துவதற்காக ஆப்ஷனை அவர் தேர்வு செய்திருந்தார். ஆனால், குறித்த நேரத்தில் பணம் திரும்பச் செலுத்த தவறிவிட்டார்.

அவருக்கு பணம் கட்டச் சொல்லி தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அவர் குறித்த அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். அதாவது லோன் கொடுத்து கட்டமுடியாமல் போனால் இதுபோல் செயல்பட்டு பணம் வசூலிப்பதை அந்த அப்ளிகேசன் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாம். அந்தப் பெண் இதுகுறித்து நுகர்வோர் பாதுக்காப்பு மையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்!

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

இது என்ன புதுக்கதையா இருக்கே என்று இந்தச் செய்தியைப் படித்து விட்டு சமூகத் தளங்களில் விமர்சித்து வருகின்றனர். 

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.