ஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
man-jump-and-save-child
man-jump-and-save-child

சிறு குழந்தையை காப்பாற்றுவதற்கு மோட்டர் பைக்கில் இருந்து குதித்து…

வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் யார் என்றே தெரியாத ஒரு சிறு குழந்தையைக் காப்பாற்றுவதற்காக சாகசம் செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வைரல் வீடியோ அண்மையில் இன்டர்நெட்டில் சுற்றிவருகிறது.

25 செகண்டுகள் ஓடும் இந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு சிறு குழந்தை சாலை அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் வழுக்கி விழுந்ததை கவனித்தார். ஆபத்தை உணர்ந்த அவர் உடனடியாக வினையாற்றினார்.

ஓட்டிக் கொண்டிருந்த வாகனத்தையும் தன் கைப்பையையும் இருந்தது இருந்தபடி போட்டுவிட்டு அந்த குழந்தையைப் காப்பாற்ற ஒட்டம் எடுத்தார். குழந்தைக்கு எந்த ஆபத்தும் நேரும் முன்பே அதனை காப்பாற்றி விட்டார். இதில் அந்த குழந்தை தொடர்பான ஒரு பெண்மணி வந்து குழந்தையை தூக்கி கொள்கிறார்.

இந்த சம்பவம் கொலம்பியாவில் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து உள்ளார்கள். 17 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளனது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

“ஆமாம்… அவர் ஒரு அற்புதமான மனிதர்!” என்றும் “அந்த கணத்தில் குழந்தையைக் காப்பாற்றுவது மட்டுமே அவர் தன் முழுமுதற் கடமை என்று நினைத்தார்” என்றும் பார்த்தவர்கள் காமெண்ட் போட்டுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.