கருப்புப் பட்டியலில் மசூத் அஸார் வைக்கப்பட வேண்டும்: உலக நாடுகள் வலியுறுத்தல்

Published:

masood azhar - 2026

ஜெய்ஷ்-இ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என உலக நாடுகள் கூறியுள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வரும் ரஷ்யா, தற்போதும் இந்தியாவுக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே இந்தியாவுக்கு ஆதரவான நிலையை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

அண்மையில் புல்வாமாவில் பாகிஸ்தான்ன் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஜெய்ஷ்-இ-மொஹம்மத் பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை ஐ.நா. கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ஜெய்ஷ்-இ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும்; மசூத் அசார் சர்வதேச பயணம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்; அவனது சொத்துக்களை முடக்கவேண்டும் என்று பரிந்துரைகள் செய்துள்ளன.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

ஆனால் இந்தியா தரப்பில் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று இந்திய மக்கள் வலியுறுத்துகிறார்கள்! பாகிஸ்தானாக ஒப்படைக்க வேண்டும் அல்லது, அமெரிக்கா ஒசாமா பின்லேடன் விவகாரத்தில் கையாண்டது போல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்கள்!

Related articles

Recent articles

spot_img