December 6, 2025, 9:13 AM
26.8 C
Chennai

சமையல் கலைஞர் உள்பட இலங்கை பிரபலங்கள் சிலரும் உயிரிழப்பு!

srilanka blast santha - 2025

ஈஸ்டா் நாளை முன்னிட்டு இலங்கையில் கிறிஸ்தவா்கள் சர்ச்சுகளுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள சர்ச்சுகளில் திட்டமிடப்பட்ட ரீதியில் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் சர்ச்சிலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு சர்ச்சிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. தொடர்ந்து நட்சத்திர விடுதிகள் என இதுவரை எட்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 200 பேர் உயிாிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மேலும் குண்டுகள் வெடிக்குமோ என்ற பீதியில் இலங்கை மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட உலகம் முழுவதும் உள்ள தலைவா்கள் கண்டனம் தொிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புகளில் கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட நகர்களைச் சேர்ந்த கணிசமான கிறிஸ்துவ மதமாற்றப் பட்ட தமிழர்களும், வெளிநாடுகளைச் சோ்ந்த சுமார் 35 பேரும் அடங்குவர் என்று தெரிகிறது.

இந்த தொடா் குண்டுவெடிப்பைத் தொடா்ந்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

srilanka blast1 - 2025

பள்ளிகளுக்கு அடுத்த இரு தினங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. காவல் துறையினர் விடுப்பில் இருந்தால் உடனே பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப் பட்டிருக்கிறது.

வதந்திகள் பரவுவதைத் தடுக்க சமூக வலைத்தளக் கண்காணிப்பு, கட்டுப்படுத்தல் ஆகியவற்றை அரசு மேற்கொண்டிருக்கிறது..

இந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு முஸ்லீம் கவுன்சில் ஆஃப் ஸ்ரீலங்கா’ அமைப்பு தலைவர் வருத்தம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த குண்டு வெடிப்பில் பிரபலங்கள் சிலரும் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

srilanka blast - 2025

கொழும்பு ஷங்கரில்ல உணவகத்தில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில், இலங்கையின் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே, தனது மகளுடன் உணவருந்தச் சென்றதாகவும் இந்தக் குண்டுவெடிப்பின் போது, அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கொழும்புவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில், தனது உறவினர்களுடன் உணவருந்தச் சென்றார் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories