இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்! ஐ.எஸ். பொறுப்பேற்றதாக ’ராய்ட்டர்ஸ்’ தகவல்!

Published:

srilanka funeral - 2026

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் என்ற ஐஎஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஏசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டா் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்ற நேரத்தில், தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. மக்கள் அதிகம் கூடியிருக்கும் சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடா் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்தத் தாக்குதலில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 321-ஆக உயா்ந்துள்ள நிலையில், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் குறித்து பல்வேறு அனுமானங்கள் கூறப் பட்டு வந்தன.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில், இந்தியா, போர்ச்சுக்கல், துருக்கி, ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கிறிஸ்துவர்கள், வெளிநாட்டவரைக் குறிவைத்து நடத்தப் பட்ட இந்தத் தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல் அளித்த இலங்கை அரசு, தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, உள்ளூர் இஸ்லாமிய அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் காரணம் என்றும் கூறியது. அதன் அடிப்படையில் இலங்கை அரசு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மிகக் கொடூரமான, திட்டமிட்ட, பெருமளவில் உயிர் குடிக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்தச் சதிச் செயலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமேக் நிறுவனத்தை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

ஏற்கெனவே இலங்கை தொடர் குண்டுவெடிப்பு, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இல்லாமல் சாத்தியமில்லை என்று இலங்கை உளவு அமைப்புகள் கூறி வரும் நிலையில், சர்வதேச ஊடக நிறுவனமான அமேக், இதற்கு ஐஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

அமேக் நிறுவனத்தின் தகவலை மேற்கோள் காட்டி ராயட்டர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளது. அமேக் நிறுவனம் தனது செய்தியில், இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 42 பேர் கடந்த 2016ம் ஆண்டு, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளதாக இலங்கை அரசு தகவல் வெளியிட்டது. இப்போது அதனைச் சரிபார்க்க வேண்டும் என்று அமேக் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img