புது தில்லி நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாபா காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. நேபாளத்தில் 5 முறை பிரதமராகப் பதவி வகித்தவர் சூர்ய பகதூர் தாபா. புற்றுநோய் காரணமாககடந்த மார்ச் 29 இல் புது தில்லி அருகே குர்காவ்னில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1990க்கு முன்னர் நேபாளத்தில் மன்னர் ஆட்சி முறை இருந்த போது, இவர் மூன்று முறை ரப்பர் ஸ்டாம்ப் பிரைம் மினிஸ்டர் என்ற அளவில் பதவி வகித்தார். 1990ல் பல கட்சி ஆட்சி கொண்டுவரப்பட்ட பிறகு, இவர் ராஷ்டிரீய பிரஜாதந்த்ரா கட்சியை உருவாக்கி, அதன் மூலம் இரு முறை பிரதமராகப் பதவி வகித்தார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இவரது மகன் சுனில் பஹதூர் தாபா, நேபாள வர்த்தக அமைச்சராக உள்ளார். தாபாவின் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் தில்லி மெடேந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை நேற்று காலமானார். அவருக்கு வயது 87. இதையடுத்து அவரி்ன் உடல் விமானம் மூலம் நேபாளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. முன்னதாக, ஐந்து முறை பிரதமராக இருந்த சூர்ய பகதூர் தாபா மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்திருந்தார். நேபாள அரசு இன்று இவரின் இறுதிச் சடங்கு நடைபெறுவதை ஒட்டி, அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது.
தில்லியில் காலமான நேபாள முன்னாள் பிரதமரின் உடல் தகனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari