பாரத நாட்டையும் பிரதமர் மோடியையும் இழிவுபடுத்திப் பேசிய இலங்கை முஸ்லிம் எம்.பி.,மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Published:

haris mp srilanka - 2026

“காஷ்மீர் விவகாரம் ”  பாரத நாட்டையும், பாரத பிரதமரையும் இழிவு படுத்தி பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம். எம்.ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க இந்து தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில்…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் இவர் முன்னாள் இராஜங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச் எம் எம் ஹரீஸ் கல்முனைத் தொகுதி (அம்பாறை மாவட்டம்) தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆக பாராளுமன்றத்தில் உள்ளார்.

கல்முனை தமிழர்களையும் அடக்கி வடக்கு பிரதேச செயலகம் கல்முனை எனும் ஒன்றை தமிழ் மக்களுக்கு கொடுக்க விடாமல் தடுக்கும் பெரும் இனவாதி பேசிய பேச்சினை அவரது பேஸ்புக் பக்கத்தில் கேட்க நேர்ந்தது. இந்த வீடியோவில்,  4.50 நிமிடத்தில் இருந்து கேட்ட போது, அதில் நம் பாரத நாட்டையும், பிரதமரையும் இழிவுபடுத்திப் பேசியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இவர் இலங்கையில் இருந்துகொண்டு தமிழ் மக்களையும் அடக்கிக் கொண்டு இருக்கின்றார். அத்தோடு கல்முனைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அங்கு இருக்கும் தமிழ் மக்களின் 30வருட கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்வு நடக்க கூடாது என்றும் அந்த நாட்டில் இனவாதம் கக்கிய இவர் தற்போது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருக்கிறார்.

மேலும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நேற்று முந்தினம் உரையாற்றி உள்ளார். இவ்வாறு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எமது பாரத அரசையும், பாரத பிரதமரையும் கொச்சைப் படுத்தியும் பாரத மக்களின் ஜனநாயக தேர்வை காவிஆட்சி என்றும், வடக்கில் காஷ்மீர் மாநிலத்தில் ஜிகாத் செய்து கொண்டு இருக்கும்,முஸ்லிம் சகோதரர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது என்று குறிப்பிட்ட இவரை இந்து தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

காஷ்மீரிய தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் இவரின் பேச்சுக்கு கண்டனங்களை வெளியிடுகின்றோம்.

அத்தோடு இலங்கை கல்முனை வாழ் தமிழர்களையும் அடக்கி இந்து ஆலயத்தின் வீதி பெயர் “தரவைப் பிள்ளையார் வீதி” என்ற வீதியின் பெயரை ” கடற்கரை பள்ளிவாசல் வீதி” என சட்டத்துக்கு முரணாக மாற்ற நினைக்கும் இந்து விரோதி இவரை வன்மையாக கண்டிக்கின்றோம். பாரத அரசும், இலங்கை அரசும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

 

Related articles

Recent articles

spot_img