தாய் மண்ணுக்கு திரும்ப தயாராகி வரும் காஷ்மீர் பண்டிட்டுகள்: உற்சாக கொண்டாட்டம்…!

Published:

kasmer banted - 2026

ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் பூர்விக குடிமக்களான, பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகும். கடந்த காலங்களில் காஷ்மீரில் ஏராளமான எண்ணிக்கையில் வசித்து வந்தனர்.

பின்னா் காஷ்மீரில்,ஏற்பட்ட பயங்கரவாதம் தலைதுாக்கியதை தொடா்ந்து அவர்கள், அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டனர்.

MODI - 2026

 

தற்போது அவர்களில் ஏராளமானோர் டில்லி மற்றும் நாட்டில் பல்வேறு இடங்களில், அகதிகளாக வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது எடுத்துள்ள அதிரடியான நடவடிக்கை குறித்து, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை, எங்கள் வாழ்வில், புது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது.

ஆக., 5ம் தேதி, எங்கள் வாழ்வில் மிக முக்கியமான நாள். சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ள நாள்

 

.ஷ்யமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபத்யாய, வாஜ்பாய் போன்ற தலைவர்களின் லட்சியம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

எங்களின் கலாசாரம், அடையாளம் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நாங்கள், விரைவில் தாய் மண்ணுக்கு திரும்புவோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Ameethsha - 2026

ஜம்முவில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில் உள்ள போதும், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் வந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை இசைத்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வாழ்த்தி, கோஷங்களை எழுப்பினர்.

Related articles

Recent articles

spot_img