ராமர் கோவில் கட்ட… ‘தங்க’ செங்கலே தருகிறோம்: இளவரசர் யாகூப்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

ram mandir - 2026

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் தங்க செங்கல் வழங்கப்படும்: இளவரசர் யாகூப் !

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டால் தங்கச் செங்கல் வழங்குவதாக மொகலாய வம்சாவளியைச் சேர்ந்த இளவரசர் யாகுப் ஹபீபுதீன் டூசி தெரிவித்தார்.

அயோத்தியில் ராம் மந்திர் கட்டப் போகிறதென்றால், கோயில் கட்டுவதற்கு தங்கச் செங்கல் வழங்கப் போகிறோம். நான் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் … அதைக் கேட்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறோம். ஏனென்றால் வக்ஃப் வாரியம் அயோத்தி நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல!

இளவரசர் யாகூப் ஒரு செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார்.

“மசூதி 1529 ஆம் ஆண்டில் அங்கு கட்டப்பட்டது. இது இராணுவம் மற்றும் கமாண்டோக்களுக்காக கட்டப்பட்டது, அது தனியார் சொத்து. நாங்கள்தான் நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர்கள்.

PrinceYakub - 2026உச்ச நீதிமன்றம் கூட 2005ல் நான் ஷாஜகானின் பேரன் என்று ஒப்புக் கொண்டது என்று இளவரசர் யாகூப் கூறினார்.

மேலும், அந்த நிலத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் அவரிடம் கொடுத்தால், அதை அவர் இந்திய அரசிடம் ஒப்படைப்பாராம்.

“எங்கள் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டு உரிமையை வழங்கினால், அயோத்தியில் ராம் மந்திர் கட்டுவதற்காக மொத்த சொத்துக்களை இந்திய அரசுக்கு தருவேன், கோயில் கட்டுவதற்கு தங்க செங்கல் தருவேன்” என்று அவர் கூறினார்.

yakup 1 - 2026

நீதிபதி எஸ் ஏ பாப்டே, திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்துக்கு வராததால், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் திங்கள் நேற்று ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கை விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வட்டாரங்களில் கூறியபடி, நீதிபதி பாப்டே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச், ஆகஸ்ட் 6 முதல் இந்த வழக்கை தினசரி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன், திங்கள்கிழமை நேற்று, தனது வாதங்களைத் தொடர திட்டமிடப்பட்டிருந்தார்.

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியோருக்கு சமமாக பிரிக்க உத்தரவிட்ட 2010ம் ஆண்டின் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.