தரையிரங்கும் போது ஏற்பட்ட விமான விபத்து !

இந்தியா பொது தகவல்கள்
crash 1 - 2026

டெல்லியில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தானிபூர் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 2 விமானிகள் உள்ளிட்ட 6 பேர் இருந்தனர்.

விமானம் தரையிறங்கும்போது, தரையிறங்கும் போது அதன் சக்கரங்களில் ஒன்று கம்பிகளில் சிக்கியதை அடுத்து, வி.டி-ஏ.வி.வி என்ற பயிற்சி விமானம் தனிபூர் வான்வழிப் பாதையில் மோதியது. விபத்தைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அலிகார் நகர மாஜிஸ்திரேட் வினித் குமார் சிங் தெரிவித்தார்.

அவர்கள் மீட்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் விமானத்தின் பெரும்பகுதி எரிந்துபோனது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தை பழுதுபார்ப்பதற்காக, டெல்லியில் இருந்து விமான பொறியாளர்களை ஏற்றி வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.