சென்னை: சென்னை சென்ட்ரல் – நேரு பூங்கா, டிஎம்எஸ் – சின்னமலை இடையிலான சுரங்கவழிப் பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் ஏற்கெனவே நேரு பூங்காவில் இருந்து திருமங்கலம் கோயம்பேடு ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலை வரையிலும், சின்னமலையில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று, பணிகள் முடிவடைந்த நிலையில், சென்னை சென்ட்ரல் – நேரு பூங்கா, டிஎம்எஸ் – சின்னமலை இடையிலான சுரங்க வழிப் பாதைகளில் ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப் பட்டது.
இதற்கான விழா எழும்பூரில் வெள்ளிக்கிழமை இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




