சென்னை மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவச பயணம் போகலாம். 3 நாட்களுக்கு இலவசம் மிஸ் பண்ணாதீங்க என்று சொன்னதால், கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை சென்ட்ரல் – விமானநிலையம் வரை மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம். சென்ட்ரல் வரை புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிமாக உள்ளது.
மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையிலான புதிய மெட்ரோ ரயிலை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
தொடக்க விழாவை முன்னிட்டும், கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதை முன்னிட்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் பயணிகள் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம். சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை உள்ள எந்த நிலையங்களிலும் இறங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




