கொச்சி-வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்லக் கோரிக்கை!

உள்ளூர் செய்திகள் புகார் பெட்டி மதுரை லைஃப் ஸ்டைல்
request srivi mla - 2026

கொச்சி முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி மனு கொடுக்கப் பட்டது.

புகழ் பெற்ற தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம், ராஜபாளையத்தை அடுத்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது. ஆன்மிகத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், செங்கோட்டை – மதுரை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் நின்று செல்வது வழக்கம். ஆனால் வாராந்திர ரயிலான வேளாங்கண்ணி – கொச்சி ரயில் மட்டும் நின்று செல்வதில்லை!

இந்த ரயில் தஞ்சை பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபட வசதியாக இருக்கும் என்றும், எனவே ஆன்மிகச் சுற்றுலா ரீதியிலான அன்பர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த ரயில் நின்று செல்ல வழி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப் பட்டு வந்தன.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த ரயில் அவசியம் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே மண்டல அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #சந்திர_பிரபா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.