earth quake - 2026

தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோல் 6.2 ஆக பதிவு!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
earth quake - 2026

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் வாகனத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் நிலவரப்படி இன்று அதிகாலை 5.41 மணிக்கு பிலிப்பைன்ஸின் தாவோ ஓரியண்டல் மாகாணத்தின் தர்கோனா நகரத்திலிருந்து தென் கிழக்கே 136 கி.மீ தொலைவில் 96 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்று அறிவித்தது, அதன் பின்னர் 5.7 ஆக குறைத்தது.

இந்த நிலநடுக்கம் மின்டாவ் தீவில் அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.