IMG 20220505 WA0079 - 2026

ஆட்டோ மீது  மரம் விழுந்து 2 பேர் பலி..

சற்றுமுன்

திருநெல்வேலி  மாவட்டம் பத்தமடை அருகே ஆட்டோ மீது  மரம் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே பத்தமடையில் சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் காதர் மற்றும் பெண் பயணி ரஹ்மத் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

IMG 20220505 WA0079 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.