December 6, 2025, 5:11 AM
24.9 C
Chennai

பதற்றத்தை உருவாக்க பியூஷ் மானுஷ் சதி! பாஜக அலுவலகத்தில் கும்மாங் குத்து!

piyush manush bjp - 2025
  • செருப்புமாலை அணிந்து பாஜக அலுவலகத்தில் நுழைந்த பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் தாக்குதல்:
  • பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக செருப்பு மாலை அணிந்து, சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்ற சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ், அங்கிருந்த நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • வாக்குவாதம் முற்றியதையடுத்து பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் தடுத்தும், பியூஸ் மனுஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பியூஸ் மனுஷ் மயங்கி நின்றார். அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.

சேலத்தில் மரவனேரி பகுதியில் உள்ளது பாஜக அலுவலகம். இன்று மாலை 5 மணி அளவில் அங்கே சென்ற பியூஸ் மானுஷ் பாஜக.,வினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன!

சேலத்தில் தங்கியிருந்து, சமூக செயற்பாட்டாளர் என்று ஊடகங்களால் கொடுக்கப் பட்ட அடைமொழியுடன் செயல்பட்டு வரும் பியூஷ் மானுஷ் என்பவர், சமூகப் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சேலம் பாஜக., அலுவலகத்துக்குச் சென்றார்.

தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை, காஷ்மீர் விவகாரம் குறித்து பாஜக.,வினரிடம் கேள்வி எழுப்பப் போவதாகவும், அது குறித்து அவர்கள் தரும் விளக்கத்தை உலகுக்குத் தெரியப் படுத்தப் போவதாகவும் கூறி, சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்றார் பியூஸ் மானுஷ்!

தான் அவ்வாறு பாஜக அலுவலகத்திற்கு சென்று கேள்விகள் கேட்கப் போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பியூஸ் மானுஷ் ஏற்கெனவே இன்று காலை பதிவிட்டிருந்தார்! அவரது தகவல் அறிந்து போலீசார் பாஜக அலுவலகத்திற்கு ஏற்கெனவே வந்திருந்தனர். ஒரு தகராறு நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே நன்கு அறிந்த ஊடகங்கத்தினரும் வந்திருந்தனர்.

பியூஷ் மானுஷிடம் தொடக்கத்தில் சுமுகமாகப் பேசி பதிலளித்துக் கொண்டிருந்தனர் பாஜக.,வினர். அப்போது பாஜக அலுவலகத்தில் அங்கிருக்கும் தொண்டர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளிடம் பியூஸ் மானுஷ் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தாக்குதல் நோக்கத்தில் பேச… தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது!

அங்கே போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தனர். ஒரு கட்டத்தில் பாஜக.,வினர் ஆக்ரோஷமாக பியூஷ் மானுஷை வெளியே போ என்று தள்ளிவிட்டுள்ளனர். அதனை போலீஸார் தடுக்க முயலவே, அங்கே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்து கொண்டிருந்தார் பியூஷ் மானுஷ்.

அதற்கு முன்னதாக அவர் போட்டிருந்த கருத்து பெரும் களேபரத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே ஒரு கலவரத்தை ஏற்படுத்தப் போவதாக அறைகூவல் விடுத்து பாஜக., அலுவலகம் சென்றுள்ள பியூஷ் மானுஷை, போலீசார் முன்னமேயே தடுத்திருக்க வேண்டும்! அல்லது, அத்துமீறி நுழைந்துள்ளதாகக் கூறி கைது செய்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்!

இவ்வாறு, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்லத் காங்கிரஸ் திமுக., உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கு கட்சி சாராத வேற்று நபர், கலவரம் உருவாக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவல் விடுத்து சென்றால், போலீஸார் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் பாஜக.,வினர்.

பியூஷ் மானுஷுக்கு இவ்வாறு கேள்வி எழுப்ப வேண்டுமென்றால், சம்பந்தப் பட்ட துறைக்கு கடிதம் எழுத வேண்டும்! இப்போது ஆன்லைனில் அரசு வெளிப்படையாக நிர்வாகம் நடத்துகிறது! கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்கலாம்! அல்லது, பியூஷ் மானுஷ் என்ற நபரை வெளி உலகுக்கு அறிமுகப் படுத்தி, வளர்த்துவிட்ட வார இதழ், டிவி, ஊடகங்களில் பொது விவாதத்தில் கேட்டிருக்கலாம்…

இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டிருப்பது தவறான முன்னுதாரணம் என்பதுடன், பல்வேறு கட்டத் தாக்குதல்களுக்கு இலக்காகி, தொண்டர்கள் பலரை பயங்கரவாதத்துக்குப் பலி கொடுத்திருக்கிற பாஜக., அலுவலகத்தில் எவர் வேண்டுமானாலும் புகுந்து எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலைக்கு காவல் துறை கொண்டு வந்திருப்பது கண்டனத்துக்கு உரியது!

குறிப்பாக, இன்றைய காலச் சூழலில், அடியாள் வேலை பார்த்திருக்கும் பியூஷ் மானுஷின் பின்னணியில் எந்த இயக்கம் இவ்வாறு செயல்படத் தூண்டியது, இதற்குப் பின்னணியில் நடந்த பரிவர்த்தனைகள் என்ன? எவ்வளவு பணம் இதற்காக தரப்பட்டது, இதற்கான நிதி ஆதாரங்கள் என்ன என்பது போன்ற கேள்விகளை புலனாய்வுத் துறையினர் பியூஷ் மானுஷிடம் கேட்டுப் பெற்றாக வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories