தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம்: சாஸ்த்ரா எஸ்.வைத்தியசுப்பிரமணியம்!

கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வேலைவாய்ப்பு
web Employment story - 2026

தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு என்று கூறுகிறார், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதன்மையர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம்.

அவர் இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டது…

@SastraUniv சாஸ்த்ரா பல்கலைக்கழகம், 500 வேலைவாய்ப்புகளை கடக்கிறது. முன்னணி தயாரிப்பு மற்றும் முக்கிய ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்று ஒரு மைல்கல் சாதனை. வேலைகளுக்கான சேர்ப்பு 1500 இலக்கைக் கடந்து செப்டம்பர் மாதத்தின் நடுவில் எளிதில் பயணிக்கும். ஆகவே மாணவ சமூகத்துக்கான செய்தி தெளிவாக உள்ளது: பணிகளுக்கான தகுதியுள்ளவர்களாக நாம் இருக்கும் வரை பணி வாய்ப்புகள் இருந்து கொண்டேயிருக்கும்.

அண்மைக் காலமாக தொழில்துறை நசிந்துவிட்டது, பலர் வேலையிழந்து வருகிறார்கள் என்றெல்லாம் சோர்வு ஏற்படும் விதத்தில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், வைத்தியசுப்பிரமணியத்தின் இந்தத் தகவல், மாணவர்களுக்கு நிச்சயம் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.