டாபை நோக்கி ஓடும் டாப்சி!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
rashmi rocket - 2026

தடகள வீராங்கனை பற்றி தமிழ் திரைப்பட இயக்குனர் எழுதிய கதையில் நடிக்கிறார் டாப்சி.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் டாப்சி,கடந்த ஆண்டு இந்தியில் இவர் நடித்த பிங்க் படம் அபார வெற்றி பெற்றதை அடுத்து, இவரின் சம்பளம் மேலும் கூடிக்கொண்டே போகிறது.

இதனால் தான் நடிக்கும் படங்களையும் கவனமாக தேர்ந்தெடுக்கிறார். தற்போது பிஸியான நடிகையாக உள்ளார். குறிப்பாக இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் மிஷன் மங்கள். இப்படம் வசூல் மழை பொழிந்தது.

இந்நிலையில் டாப்சி அடுத்ததாக ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் தடகள வீராங்கனையாக நடிக்கிறார். படத்தின் பிரமோஷன் போஸ்டரை டாப்ஸி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இது ஒரு உண்மை கதை. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதித்த வீராங்கனை பற்றி இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதிய கதை தான் ராஷ்மி ராக்கெட்.

tapci 1 - 2026

இவர் ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி ஆகிய படங்களை இயக்கியவர். டாப்ஸி இதற்கு முன் சூர்ணா எனப்படும் இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு மீண்டும் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் கவனம் டாப்ஸி பக்கம் திருப்பியுள்ளது இப்படத்தை ஆகார்ஷ் குரானா இயக்குகிறார். அனிருத்தா குஹா திரைக்கதை அமைத்துள்ளார். ராஷ்மி ராக்கெட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுவதுமாக மாற்றி இருக்கிறார் டாப்சி.இதன் மூலம் டாப்ஸி பாலிவ அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து ரசிகர்கள் சமூகவலை தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுவதுமாக மாற்றி இருக்கிறார் டாப்சி.இதன் மூலம் டாப்ஸி பாலிவுட்டில் மிக பெரிய கதாநாயகியாக வளர்ந்து வருவது கண்கூடாக தெரிகிறது. அவரது அர்ப்பணிப்பைப் பார்த்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.