திமுக ஒரு தீயசக்தி; அமைச்சர் ஜெயக்குமார்!

உள்ளூர் செய்திகள் சென்னை
jayakumar - 2026

பதவிகளுக்காக ஆசைப்பட்டு அதிமுகவிலிருந்து யாரும் திமுகவிற்கு போகமாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

stalin - 2026

சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சியின் திறப்பு விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார், பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து யாராவது தனது கட்சிக்கு மாறுவார்களா என காத்திருக்கிறார். அதுவும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார். அப்படி வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதை’ என கூறினார்.

மேலும் அந்த பேட்டியில், எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா வழி வந்தவர்களாகிய அதிமுகவினர் ஒரு போதும் திமுகவிற்கு போகமாட்டார்கள். திமுக ஒரு தீய சக்தி என்பதை எம்.ஜி.ஆர். உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்’ என திமுகவின் மீது கடும் விமர்சனத்தை வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.