நுங்கு ஜூஸ்:
தேவையானவை:
நுங்கு – 6
சப்ஜா விதை – 2 டேபிள்ஸ்பூன்
தேன் – தேவையான அளவு
நட்ஸ் – 5
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
நுங்கைத் தோல் உரித்து அதன் சதைப்பகுதியை தனியே எடுத்துக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் சேர்த்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
நுங்கு ஜூஸூடன் சப்ஜா விதை, தேன் நடஸ் சேர்த்துக் கலந்து அரை மணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்து கூலிங் ஆனதும் எடுத்துப் பரிமாறவும். இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து உடல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.