அசத்தும் தல! வரிசையாக வசூல் சாதனை!

சினி நியூஸ் சினிமா
ajith 1 1 - 2026

நடிகர் அஜித் நடித்த கடைசி 4 படங்கள் வரிசையாக சாதனை படைத்து ஓடிக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஆசை நாயகன் என்றழைக்கப்பட்ட அஜித் தன் படங்களின் வெற்றியினால் வசூல் நாயகன் என அழைக்கப்பட்டார். பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் கூட அஜித்திற்கு ரசிகர் பலம் கொஞ்சமும் குறையவில்லை அது குறையவும் குறையாது..

முதல் நான்கு நாள் ஓப்பனிங் கலெக்சன் அவருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடைசியாக வெளியான நான்கு படங்களே இதற்கு தக்க உதாரணம் ஆகும்.

ajith 2 - 2026

அதன்படி வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், ஆகிய நான்கு படங்கள் வரிசையாக அஜித்திற்கு பிளாக் பாஸ்டர் படங்களாக மாறியுள்ளது. இன்டர்நெட் காலத்தில் இந்த படங்கள் பெரிய சாதனை படைத்து இருப்பதாக தியேட்டர் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரோகிணி திரையரங்கம் இது தொடர்பான விவரங்கள் வெளியிட்டுள்ளது.

இணையம் வந்த பின் ஒரு படம் 30 நாட்களுக்கு மேல் ஓடுவது என்பது மிகவும் சவாலான காரியம். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றாலும் ஒரு மாதத்திற்கு மேல் தியேட்டரில் இருப்பது கிடையாது. சில ஹீரோக்களின் படங்கள் இரண்டு வாரங்கள் தாண்டுவது கூட சவாலான விஷயம் ஆகும்.

ajith 3 - 2026

பெரிய ஹீரோக்களின் வரிசையில் இருக்கும் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் ஆகிய நான்கு படங்கள் வரிசையாக 50 நாட்களை தாண்டி ஓடியுள்ளது. அதன்படி வீரம் 60 நாட்கள், வேதாளம் 58, விவேகம் 55, விசுவாசம் 88 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக சென்னை ரோகினி தியேட்டரில் இன்னும் அஜித் படங்கள் முழு கூட்டத்துடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ajith - 2026

இந்த நான்கு படங்களை விட நேர்கொண்ட பார்வை இன்னும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் இந்த படம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பெண்களும் இந்த படத்தை புகழ்ந்து வருகிறார்கள்.

இந்த நான்கு படங்களும் எப்படி வரிசையாக ஹிட் ஆனதோ அதேபோல் நேர்கொண்ட பார்வையும் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வை வெளியாகி ஏற்கனவே 40 நாட்கள் ஆகிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.