பிரபல பாலிவுட் நடிகையும், சுந்தர் சி இயக்கவுள்ள ‘சங்கமித்ரா படத்தின் நாயகியுமான நடிகை திஷா பதானி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இடையழகை குறிப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருவதோடு இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
காதலரின் அறிவுரையை பின்பற்றி தினமும் ஜிம்மில் பலமணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்து வரும் திஷா, தனது உடலை ஒல்லியாகவும், கட்டு மஸ்தாகவும் வைத்திருக்க உடற்பயிற்சி உதவுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மிக விரைவில் ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த படம் தனக்கு இந்திய அளவில் பெரிய பெயரை பெற்றுத்தரும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.