கதாநாயகி இன்றி தொடங்கிய கனவு நாயகனின் பைட்டர் படபிடிப்பு!

Published:

vijaydevarakonda - 2026

விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங், ஹீரோயின் யார் என்று முடிவாகாமல் இன்று தொடங்கியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

vijaydevarakonda 1 - 2026

இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஃபைட்டர் என்று டைட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

vijayadevarakonda 1 - 2026

இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே ஐஸ்மார்ட் சங்கர் படத்தை இணைந்து தயாரித்திருந்தனர். விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் இந்தியிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர்.

janvi 1 - 2026

இதில் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.

kiyara 1 - 2026

ஏற்கனவே கியாரா அத்வானியும் கால்ஷீட் பிரச்னையால் மறுத்துவிட்ட நிலையில், இப்போது அனன்யா பாண்டே நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
ananya 1 - 2026

இதற்கிடையே, ஹீரோயின் முடிவு செய்யப்படாமலேயே இந்தப் படத்தின் தொடக்க விழா மும்பையில் இன்று நடந்தது. நடிகையும் தயாரிப்பாளருமான சார்மி கிளாப் அடித்து தொடக்கி வைத்தார்.

ramyakrishnan 1 - 2026

இந்தப் படத்தின் விஜய் தேவரகொண்டாவுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். படத்துக்காக நடிகர் விஜய் தேவரகொண்டா தாய்லாந்தில் 15 நாட்கள் தற்காப்பு கலை பயிற்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img