சலூன் கடைக்காரர்களுக்கு ஆசிரியர் வைத்த அன்புக் கோரிக்கை என்ன தெரியுமா?!

உரத்த சிந்தனை சற்றுமுன் நலவாழ்வு புகார் பெட்டி மதுரை லைஃப் ஸ்டைல்
student hair style - 2026

மாணவர்கள் மீது தயவு செய்து அக்கறை காட்ட வேண்டும் என்று சலூன் கடை உரிமையாளர்களுக்கு ஆசிரியர் கோரிக்கை வைத்திருக்கிறார். இது பரபரப்பாக இப்போது சமூகத் தளங்களில் சுற்றி வருகிறது.

இது குறித்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விடுத்திருக்கும் வேண்டுகோள்கள்…

பள்ளி மாணவர்கள் தங்களுடைய முடிதிருத்தும் கடைக்கு வந்தால் ஒழுங்கான முறையில் முடி திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களுக்கு இந்தப் படத்தில் உள்ளபடி முடி திருத்தம் செய்ய வேண்டாம். இது மாணவர்களின் ஒழுக்கமின்மையைக் காட்டுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

student2 - 2026

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழகு என்ற பெயரில் புருவத்தையும் வெட்ட ஆரம்பித்து விட்டார்கள் .இது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நல்ல தலைவர்களை உருவாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

சில பெற்றோர்கள் ஓவர் “செல்லம்” கொடுப்பதால் இதைக் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்களும் கண்டிப்போடு சொல்ல முடியவில்லை.

ராணுவம் மற்றும் ஆபீசர்ஸ் பயிற்சி நிலையங்களில் உள்ளது போல் முடி திருத்தம் செய்யும் இடத்தை பள்ளிகளில் உருவாக்க வேண்டும். சீருடை போன்று ஒரே மாதிரியான சிகை அலங்காரம் செய்தால் மாணவர்களுக்கு ஒழுக்கமாக இருக்கும்.

மாணவர்கள் நலனில்… முனைவர். தா. காட்வின், உடற்கல்வி ஆசிரியர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசிரியரின் அக்கறை பாராட்டப் பட வேண்டியதென்றாலும், பெற்றோர்களை கூப்பிட்டு ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டும் என்றும், பெற்றோரே தங்கள் குழந்தைகளின் நிலை குறித்தெல்லாம் கண்டுகொள்வதில்லையே என்றும் பலரும் அதற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.