
திருச்சியை சேர்ந்தவர் 24 வயதான டெனிதா ஜீலியஸ். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பகுதியில் உள்ள தனியார் ஐடி பார்க்கில் வேலை கிடைத்ததுள்ளது.
நேற்று அவர் வேலையில் சேர்ந்தார். நேற்றிரவு வேலை முடிந்தபிறகு, நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று வேலையில் சேர்ந்தவர் எத்தனையோ கனவுகளை கொண்டிருப்பார். இவரை பற்றிய எந்த விவரமும் நிறுவனத்தில் உடன் பணிபுரிபவருக்கு தெரியவில்லை. டெனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா என்பது தெரியவில்லை. 8-வது மாடிக்கு அந்த நேரத்தில் எதற்கு சென்றார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் 9வது மாடியில் உள்ள கேன்டீனில் இருந்து, தடை செய்யப்பட்ட மாடிப்படி வழியாக கீழ் தளத்துக்கு இறங்க முயன்ற போது, ஜெனிட்டா தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது.
இதனால் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். வேலையில் சேர்ந்த முதல்நாளே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.