கோயில்களை அழித்து சிவ லங்காவை புத்த லங்காவாக மாற்றி வரும் சிங்கள அரசு!

உலகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
srilanka buddha - 2026

சிவ லங்காவை புத்தலங்காவாக மாற்ற முயற்சி!! இலங்கையில்- நாயாறு கிழக்கு செம்மலையில் உள்ள நிராவியடிபிள்ளையார் கோவிலில் புற்றுநோயில் மாண்டு போன சிங்கள பௌத்த பேரினவாத பிக்குவின் உடலை புதைக்க தடைசெய்து நீதிமன்றம் கடற்கரையில் புதைக்க ஆணையிட்டும் போக்கிரித் தனமாக கோயிலின்அருகில் புதைத்து,மகாவம்ச மனநிலையை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

இதனை தட்டிக் கேட்ட வழக்குரைஞர்கள்,பொதுமக்களை சிங்கள காடையர்கள் தாக்கியிருக்கிறார்கள்.

யுத்த நிகழ்வுகளுக்கு பின்னர் இந்துத் தமிழர்கள் வழிபடும் திருக்கோயில்கள் வளாகங்களில் புத்தர் சிலைகளை அடாவடியாக வைத்து ஆக்கிரமிப்பு செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது.

சிவ லங்காவை “புத்த லங்கா”வாக மாற்றுவதற்கு மிகப் பெரிய சதி வேலை நடந்து வருகிறது. இந்தப் புத்தர் சிலையை கொண்டுவந்து புத்தவழிபாடு
மதத்தவர்கள் இந்துதமிழர்திருக்கோயில்களின் வளாகங்களில் மட்டுமே வைப்பார்கள். பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள். ஒருமசூதியிலோ, கிறிஸ்தவ திருச்சபை வளாகத்திலோ, இந்த புத்தர் சிலையை நிறுவ அஞ்சுவார்கள்.

srilanka buddha1 - 2026

இந்து திருக்கோயில் வளாகத்தில் இந்த பௌத்தர்களின் அடாத செயலை இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய இந்து தமிழர்கள் இதற்கு எதிரான கண்டனக் குரலை எழுப்பிட கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தமிழகத்தில் சாக்கியபௌத்தத்தை விதைக்க நினைக்கக்கூடிய பௌத்த கைக்கூலிகள் இந்த செயலுக்கு என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

” சமத்துவத்தின் அடையாளம்” அன்பின் மறு உருவம் என்றெல்லாம் உதட்டளவில் பேசி கோதம புத்தர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து விரோதிகள் என்ன சொல்ல போகிறார்கள். இந்துக் கோயில் வளாகத்தை ஆக்கிரமிக்கும் இந்த கோதம புத்தர் சிலை , நாளை தமிழக திருக்கோயில் வளாகங்களில் நிறுவப்பட்டு நம்முடைய திருக்கோயில்களும் பௌத்த மயமாகி நமது வழிபாட்டு முறை அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

srilanka buddha2 - 2026

எச்சரிக்கை உணர்வோடு ஒவ்வொரு இந்து தமிழனும் செயல்படவேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். உலகத் தமிழர் களுக்காக பாரதப் பிரதமர்மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக இது குறித்து இலங்கை அரசிடம் பேச வேண்டும் மேலும் யுத்த நிகழ்வுகளுக்குப் பிறகு அழிக்கப்பட்ட உடைக்கப்பட்ட இந்து தமிழர்களின் திருக்கோயில்கள் மீண்டும் கட்டியெழுப்ப இந்திய அரசு உதவிட வேண்டும்.

இந்துதமிழர்களின் திருக்கோயில் வளாகங்களில் நடைபெறக்கூடிய பௌத்த ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட தேவையான அழுத்தத்தை பாரத அரசு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  • இராம இரவிக்குமார் (தலைவர், இந்து தமிழர் கட்சி )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.