5 ஆடுகளை வீட்டினுள் புகுந்து கொன்ற சிறுத்தை!

உள்ளூர் செய்திகள் நெல்லை
leopard - 2026

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஊருக்குள் நடமாடும் சிறுத்தை சிக்காததால் மக்கள் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். இந்தவேளையில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கடந்த 13-ம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கியது.

பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுடன் லாரியில் ஏற்றிசென்று, பாபநாசம் வனப்பகுதிக்கு கொண்டுசென்று பத்திரமாக வனப்பகுதிக்குள் சிறுத்தையை விட்டுள்ளனர் சிறுத்தை சிக்கியதால் மணிமுத்தாறு பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

sheep - 2026

மீண்டும் இன்று அதிகாலை ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்து 5 ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது. மணிமுத்தாறு தபால் நிலைய பகுதியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு ஆடுகளை வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவத்தில் அடைத்து விட்டு தூங்க சென்று உள்ளார்.

இன்று அதிகாலை அவரது வீட்டில் சிறுத்தை புகுந்த,. தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை அடித்துக் கொன்றுவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டது. இன்று காலையில் ஈஸ்வரன் எழுந்து பார்த்தபோது அவரது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்டு செத்து கிடந்தன .

மேலும் 2 ஆடுகள் காணாமல் போயிருந்தன . இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் அம்பை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அம்பை வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனவர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர் . அந்தநேரத்தில் அங்கு ஒரு பெரிய சிறுத்தை மற்றும் ஒரு குட்டி சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.