கருணாநிதி சமாதியில் வைத்து வேண்டுதல்! திமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்  திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் பட்டியலுடன், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட உள்ள #திமுக வேட்பாளர் பெயரையும் ஸ்டாலின் அறிவித்தார்.

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை உடல் நலக் குறைவால் சிகிச்சையில் உள்ள திமுக., பொதுச் செயலாளர் அன்பழகனிடம் காட்டினார் மு.க.ஸ்டாலின்!

முன்னதாக, திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னர் சென்னை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதல்வரும், திமுக., முன்னாள் தலைவரும், தனது தந்தையுமான மு.கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக. வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி சமாதியில் வைத்து திமுக.,வினர் வணங்கினர்.

இதன் பின்னர் 20 மக்களவை தொகுதி, 18 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப் பட்டது.

மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் :

 1. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
 2. மத்திய சென்னை – தயாநிதி மாறன்
 3. வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
 4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர். பாலு
 5. காஞ்சிபுரம் (தனி) – செல்வம்
 6. அரக்கோணம் – டாக்டர் ஜெகத்ரட்சகன்
 7. வேலூர் – கதிர் ஆனந்த்
 8. திருவண்ணாமலை – சி.என் .அண்ணாதுரை
 9. சேலம் – எஸ்.ஆர்.பார்த்திபன்
 10. கடலூர் – பண்ருட்டி ரமேஷ்
 11. தருமபுரி – டாக்டர் செந்தில்குமார்
 12. திண்டுக்கல் – வேலுச்சாமி
 13. கள்ளக்குறிச்சி – கவுதமசிகாமணி
 14. மயிலாடுதுறை – செ.ராமலிங்கம்
 15. நீலகிரி – ஆ.ராசா
 16. பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
 17. தென்காசி – தனுஷ் எம்.குமார்
 18. தஞ்சாவூர் – பழனிமாணிக்கம்
 19. நெல்லை – ஞானதிரவியம்
 20. தூத்துக்குடி – கனிமொழி

18 தொகுதிகளுக்கான தமிழக இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல்:

 1. பூந்தமல்லி: கிருஷ்ணசாமி
 2. பெரம்பூர்: சேகர்
 3. சோழிங்கர்: அசோகன்
 4. குடியாத்தம்: காத்தவராயன்
 5. ஆம்பூர்: விஸ்வநாதன்
 6. ஓசூர்: சத்யா
 7. பாப்பிரெட்டிபட்டி: மணி.
 8. அரூர்: கிருஷ்ணகுமார்
 9. நிலக்கோட்டை: சவுந்திரபாண்டியன்
 10. திருவாரூர்: பூண்டி கலைவாணன்
 11. தஞ்சாவூர்: நீலமேகம்
 12. மானாமதுரை: கரூர் காசிலிங்கம் என்ற இலக்கியதாசன்
 13. ஆண்டிபட்டி: மகாராஜன்
 14. பெரியகுளம்: சரவணகுமார்
 15. பரமக்குடி: சம்பத்குமார்
 16. சாத்தூர் : சீனிவாசன்
 17. விளாத்திகுளம்: ஜெயக்குமார்
 18. திருப்போரூர்: செந்தில் என்ற இதயவர்மன்

புதுச்சேரி தட்டஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்

புதுச்சேரியில் தட்டஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக கே.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...