spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனை2019 யார் கையில்? நரேந்திர மோடியா?  ராகுல் காந்தியா?

2019 யார் கையில்? நரேந்திர மோடியா?  ராகுல் காந்தியா?

- Advertisement -

rahul gandhi narendra modi

நமது பிரதமர் உலக தலைவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்குகிறார்,

இதுக்கு முன்னாடி இந்திய பிரதமர்னா ஒரு பய மதிக்க மாட்டான். இப்ப பாருங்கள் மோடிய சுத்தி உலகத்தலைவர் எல்லாம் வரிசையில் நின்று மரியாதை கொடுக்கிறான்

முன்னேற்றத்தில் சீனாவுடனான போட்டியில் நாம் தோற்று விடவில்லை. நமது நாட்டில் திறமை வாய்ந்த ஒருவர் இதுவரை ஆளவில்லை,, போன காலங்களில் திறமை உள்ளவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வில்லை அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு மோடி அரசு அமைந்தால் சீனாவை நாம் முந்திச் சென்று விட முடியும் இது உண்மை இந்தியா என்றால் என்ன வென்று இப்போது தான் உலக நாடுகளுக்கு தெரிகிறது ,,

அப்படியானால் நாட்டின் மீது தவறு இல்லை,, நாட்டை ஆளுகிறவன் மீதே தப்பு உள்ளது,, இப்போது தான் ஒரு ஆண் மகன் நாட்டை ஆளுகிறான் ,,

உலகளவில் என் பிரதமருக்கு கிடைக்கும் மரியாதை எனக்கும், என்போன்ற ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைக்கும் மரியாதையே!!

இந்திய நாடாளுமன்றம்:

எத்தனையோ பிரதமர்கள் பேசுவதை இந்திய நாடாளுமன்றம் பார்த்திருக்கிறது .. நேரு எதுவுமே உருப்படியாக செய்ததில்லை! மன்மோகன்சிங் மைக் வாய்க்குள் வைத்து பேசினாலும் யாருக்கும் கேட்காது என்ன பேசுகிறார் என்பதும் தெரியாது .நரசிம்மராவ் அவர் பேசியதுமில்லை சிரித்ததுமில்லை ஆனால் பத்துக்கு மேற்பட்ட மொழி தெரியுமாம்

தேவகௌடா அவர் கொட்டாவி மட்டுமே, குஜ்ரால் பக்கத்தில் உள்ளவருக்கே கேட்காது
சந்திரசேகர் அமைதியாகவே இருந்தார் .விரக்தியாகவே .. ராஜீவ் காந்தி அவர் பேசுவதைவிட அவரை பாராட்டி காங்கிரசினர் ஜால்ரா வே அதிகமாக கேட்டது . இந்திராகாந்தி இவர்கள் இந்தநாட்டில் மன்னர்கள் போலவே இருந்துள்ளனர்

வாஜ்பாய் லாகவமாக பேசவும் நாட்டைப்பற்றி நல்ல புரிதலும் தொலைநோக்கு பார்வையும் உள்ளவர் .ஆணித்தரமாக பேசக்கூடியவராக இருந்தாலும் உதிரி கட்சியின் ஆதரவுடன் ஆட்சியிருந்ததால் சூழ்நிலை சாதகமாக அமையவில்லை ..

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக மோடி அவர்கள் நாட்டை பற்றி தனது சிம்மக்குரலில் ஹிந்தி தெரியாதவர்கள ்கூட பிரமித்து நின்றனர் .அவ்வளவு பெரிய அங்கே அதிர்ந்தது

காலைமுதல் எதிர்க்கட்சியினர் கேள்விக்கெல்லாம் திரு மோடிஜி அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் ஆதாரத்துடன் எழுதி வைத்து படிக்காமல் சிறிதும் தடுமாறாமல் அரங்கையே அதிரவைத்த திரு மோடிஜி

உலகத்திலேயே முதன்மையான தலைவராக உயர்ந்து நிற்கிறார் .. எதிர்கட்சியினரே வாய்பிளந்து நின்றனர் .. முயலாம் சிங் யாதவு அவர்கள் மோடியே அடுத்த பிரதமர் என்றார்!  சிகாகோவில் விவேகானந்தரின் சென்ற நூற்றாண்டின் உரைக்கு பிறகு மோடிஜியின் உரையே சிறந்ததாக உலகமக்களால் பார்க்கப்படலாம்.ஆனால் மோடிஜி அவர்களே .உலக அரங்கில் இமயமாக உயர்ந்து நிற்கிறார்

ஒரே மனிதர் மோடி மட்டுமே

எத்தனை கூட்டங்கள், எத்தனை நாட்டு பாராளுமன்றங்கள் களம் கண்ட ஒரே மனிதர்

ஐ நா சபை கூட்டம் , அங்கே எத்தனை நாட்டு தலைவர்கள், எத்தனை அறிஞர்கள், அந்த கூட்டத்தில் 48 நிமிடம் எழுதி வைக்காமல் பேசிய ஒரே மனிதர் மோடி மட்டுமே ,, பேசி விட்டு i am sorry என்கிற இடம் அல்ல ஐ நா சபை ,, ஒரு சொல் தவறாக விழுந்தாலும் உலகம் நம்மை மதிக்காது ,, இப்படி பேச இந்த ராகுலால் முடியுமா ?

அது போக அமெரிக்கா பாராளுமன்ற கூட்டம் 13 முறை அந்த எம் பி க்கள் எழுந்து நின்று கை தட்டிய காட்சி, அது போல் மரியாதை இந்த ராகுலால் பெற முடியுமா ?

இஸ்ரேல் நாட்டில், பிரதமர் , அதிபர் , ராணுவ அமைச்சர் , தொழில் அதிபர்கள் , விஞஞானிகள், அறிஞர் கள் என்று எத்தனை அறிவார்ந்தவர்கள் மத்தியில் எழுதி வைக்காமல் 1 .13 நிமிடம் பேசினார்,,
இப்படி பேச இந்த ராகுலால் முடியுமா ?
இல்லை அப்படி உள்ளவர் நாட்டில் உண்டா ?

இந்தியனாக உடம்பு புல்லரிக்கிறது !

அமெரிக்கா அதிபர் மோடியை வரவேற்க வெள்ளை மாளிகை வாசலுக்கே வந்து வரவேற்று கூட்டி சென்றார் ,, ஒரு நாள் விருந்து வெள்ளைமாளிகையில் வைத்து உபசரித்தார்

இஸ்ரேல் பிரதமர் விமான நிலையம் வரை வந்து மோடி அவர்களை வரவேற்றார்,, மோடி இருந்த 3 நாளும் அவர் கூடவே இருந்தார் ,,
என் நண்பன் மோடி என்றார் ,,

இஸ்ரேல் வரலாற்றில் அமெரிக்காவை தவிர எந்த நாட்டையும் நண்பனாக்கியது கிடையாது யாரையும் மதிக்கவே மதிக்காது இஸ்ரேல் அப்படிபடட நாடு இந்தியாவை நண்பன் என்கிறது என்றால் யாரால்?

ரஷ்ய அதிபர் மோடி அவர்களை விமானநிலையம் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்!

காமன்வெல்த் மாநாட்டில் 46 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்,, நம் தேசத்தை நம் நாட்டு மக்களை 300 ஆண்டுகள் பீரங்கி முனையில் அடிமைப்படுத்தி, அடக்கியாண்ட பிரிட்டீஸ் இரானுவம், முதல் முறையாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பளம் விரித்து தலைவணங்கி வணக்கம் செலுத்தி வரவேற்றது.

பிரிட்டீஸ் மகாராணி முதல் முறையாக மோடியை தலை வணங்கி வரவேற்றார்.! மேலும் அரைமனிநேரம் மோடியுடன் தனியாக பேசினார் பிரிட்டிஷ் மகாராணி, .

இந்த தலைவர்கள் எல்லாம் எந்த நாட்டு தலைவருக்கும் இப்படி வரவேற்பு கொடுத்தது கிடையாது

அமெரிக்கா எம் பி க்கள் எ அவரிடம் ஆட்டோ கிராப் வாங்க போட்டி போட்ட காட்சி ,, இஸ்ரேல் பிரதமர் விமான நிலையம் வந்து வரவேற்ற காட்சி , டிரம்ப் வெள்ளை மாளிகை வாசலில் வந்து வரவேற்று கூட்டிட்டு போன காட்சி ,, மறக்க முடியுமா ? இப்போது நினைத்தாலும் இந்தியனாக உடம்பு புல்லரிக்கிறது ,,

இந்தியாவில் சல்லடை போட்டு அரித்தாலும் அந்த மாதிரி பேச, செயல்பட யாராவது இருக்கிறார்களா ?

உலக அரங்கில் மோடி

பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை , ஒன்றிணைத்தது ,, சீனாவை எதிர்த்து நின்றது , சீனா பின் வாங்கியது ,, இதுவெல்லாம் காங்கிரஸ் கோமாளிகளால் முடியுமா?

இந்தியா மீது கை வைப்பது அவ்வளவு எளிதல்ல என்று இஸ்ரேல் கூறியது சாதாரண விஷயம் அல்ல ,, இந்த நப்புறவு கொள்கை காங்கிரஸ் மூதேவிகளால் முடியுமா?

தெற்காசியாவின் அமைதிக்கு அனைவரும் மோடியின் பின்னால் அணிவகுக்க வேண்டும்.
– அமெரிக்கா.

டிரம்ப் அல்ல இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தியதால் தான் கச்சா எண்ணெய் விலையை குறைக்க முடிந்தது.
– சவூதி.

உலக சுற்றுசூழலை பாதுகாக்கும் எதிர்கால திட்டத்தை பாராட்டி மோடிக்கு எர்த் ஆப் சாம்பியன் விருது வழங்கியது.
– ஐநா சபை.

டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான போர் பதட்டத்தின்போது இந்தியாவுக்கு உதவும் பொருட்டு கடும் எதிர்ப்பையும் மீறி போர் முறை அவசர சட்டம் கொண்டு வந்தது
– ஜப்பான் நாடு.

சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூ காலமான சமயம் அவர் இந்தியாவில் நரேந்திர மோடி ரூபத்தில் மீண்டும் பிறந்துள்ளார் என பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டது.
– சிங்கப்பூர்.

தன் நாட்டில் வளரும் அதிய ஆர்கிட் வகை பூவுக்கு மோடி எனும் பெயர் சூட்டியது.
-இந்தோனேசியா.

தன்நாட்டின் உயரிய விருதை நம் பாரத பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தது.
-தென்கொரியா.

உலக அரங்கில் நம் பிரதமரின் பெருமைகளை சொல்லும் இந்த பட்டியல் இன்னும் நீளும்.

  • இதுவரை குண்டு வெடிப்பு இல்லை *

  • இது வரை ஊழல் இல்லாமல் ஆட்சி செய்கிறார்

*யாரிடமும் கடன் வாங்கவில்லை

*மக்கள் வரி பணத்தில் அனைத்து திட்டங்களையும் மிக வேகமாக செய்து முடித்து வருகிறார்

  • அண்டை நாட்டவர் ஆக்கிரமிப்பு அறவே இல்லை*

  • நம் இராணுவம் சுதந்திரமாகவும் வலிமையாகவும் உள்ளது*

  • உலக அரங்கில் தேசத்தின் மரியாதை உயர்ந்துள்ளது*

  • உள்நாட்டு உற்பத்தி உயர்துள்ளது*

*ஒரு பிரதமராக அவர் பணியை மிக அருமையாக செய்து செய்துள்ளார்

தவறுகள் நடந்திருக்கலாம் தவறான எண்ணத்தில் எதுவும் நடக்கவில்லை என்ற
உத்ரவாத வார்த்தையை எந்த தலைவர் பேசியிருக்கிறார் மோடியை தவிர …..

ராகுல் காந்தி

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலே ராகுலால் எழுதி வைக்காமல் பேச முடியவில்லை! அதில் தப்பா பேசினாலும் யாரும் கேக்க போவதில்லை ,, அங்கேயே அவரால் பேச முடியவில்லை என்றால் இவரோட தகுதி தான் என்ன ?

ராகுல் ஒரு நாள் பேசினாலும் யாருக்கும் எதுவும் புரியாது. அவரின் மேடை பேச்சி,,,

மோடி 15 லட்ச ரூபாய் சட் டை போட்டிருக்கிறார் ,,

15 லட்சம் தருவேன் என்றார் அதை எங்கே ?

ரெபெல் விமானத்தில் மிக பெரும் ஊழல் நடந்துள்ளது ,, இந்த மூன்றை தவிர எதுவும் பேச மாடடார் ,, ஏனென்றால் அதற்க்கு மேல் எதுவும் தெரியாது

சோனியா பரீட்சை கேள்வித்தாள் போல எழுதி வைத்து கொண்டு படித்து விடுவார். இந்த இருவர் நிலையும் இதுதான் ,,

ஒரு நாள் பட்ஜெட் கூட்ட தொடர் முடிந்து ராகுல் காந்தி வெளியே வருகிறார் ,, செய்தியாளர் எல்லாம் ராகுலை சுற்றி நின்று கேள்வி கேக்கின்றனர் ,, பதில் சொல்ல முடியாமல் ஓடுகிறார் ,, ஏதாவது தெரிந்தால் தானே சொல்லுவார் ,, இவர் பிரதமர் வே ட்பாளராம்

பெங்களூரில் கல்லூரி மாணவிகளிடையே உரையாடும் போது என்னிடம் யார் வேணும்ன்னாலும் கேள்வி கேக்கலாம் என்கிறார் ,, ஒரு மாணவி கேள்வி கேக்குறார்,, அதை பற்றி எனக்கு தெரியாது என்று கேள்வி பதிலை முடித்து கொண்டு ஓடுகிறார் இவரா பிரதம வேட்ப்பாளர் ?

இந்தியாவின் தலை எழுத்து இவரை போல் ஆள்கள்

கடைசியாக ஒரு வார்த்தை

1000 ஆண்டுகள் கழித்து பல இழப்புகளையும், சோதனைகளையும் கடந்து முதன் முறையாக ஒரு தேசிய சாம்ராஜ்யம் மலர்ந்திருக்கிறது. ஒரு உண்மையுள்ள ஹிந்துவாய் மோடி அவர்களுக்கு தோளோடு தோள்கொடுத்து நம் சாம்ராஜ்யம் மேலும் மேலும் பலமாய் எழுப்புவோம்.

மோடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம் நன்மைக்காக, நம் சந்ததி நன்மைக்காக என்பதை உணர்வோம். இதற்காகவே அவர் தன் தாயை பிரிந்து, மனைவியை துறந்து சொந்த, பந்தங்களை பிரிந்து தன்னையே இந்த தேசத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார். உங்களால் (அப்பாவி நடுநிலை ஹிந்துக்கள்) ஆக்கபூர்வமாக உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரமாவது செய்யாதிருங்கள்.

உங்கள் மனசாட்சி உண்மையாக சிந்திக்குமானால் இப்படி ஒர் தலைவனை இனி இந்தியா பார்க்க போவதில்லை..

  • மாரிதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe