மாமல்லபுரத்தில் பாரம்பரியத் தமிழனாக பிரதமர் மோடி!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
modi xijinping1 - 2026

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஸிஜின்பிங்குடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்காக இன்று காலை சென்னை வந்திருந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசின் சார்பில் பலத்த வரவேற்பு கொடுக்கப் பட்டது.

விமான நிலையத்துக்குச் சென்று ஆளுநர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர்கள், அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இது தொடர்பாக, தமிழில் தனது டிவிட்டர் பதிவுகளைச் செய்திருந்தார் பிரதமர் மோடி.

modi xijinping2 - 2026

சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.

இத்தகைய பதிவுகள் மட்டுமல்லாமல், வேட்டி கட்டியவர் எல்லாம் தமிழர் என்றால், தாமும் தமிழரே எனப் பொருள்படும் வகையில், இந்திய நாட்டின் பிரதமர் தமது நாட்டின் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியில் அசத்தினார்.

modi xijinping3 - 2026

பாரத நாட்டில் உள்ள அந்த அந்த மாநிலங்களுக்குச் செல்லும் போதும், அவற்றின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உடைகளை உடுத்துவது அவரது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தூய வெள்ளை நிற வேட்டி அணிந்து தமிழராகவே காட்சி தந்தார் பாரத பிரதமர் @narendramodi !

இது சமூகத் தளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றது. மோடிக்கு உண்மைத் தமிழர்கள் பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

டிவிட்டர் பதிவுகளில், இது பெரிதும் எதிரொலித்தது. பச்சைத் தமிழ் ரத்தம் உடம்பில் ஓடும் தமிழர்கள் மோடிக்கு வரவேற்பு தெரிவித்தும், அவரது வேட்டி கட்டிய தமிழ்க் கலாசாரத்தை உலக அரங்கில் ஏற்றம் பெற வைத்தது குறித்தும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அதில் ஒரு கருத்து…

S Narayanan@gr8naru·1hஎந்த உடை அணிந்தாலும் மோதி ஜி உள்ளழகினால் கம்பீரமாக தெரிகிறார்.. இங்கிருக்கும் அரசியல்வாதிகள் குர்தா அணிந்தாலும், கோட் சூட் போட்டாலும், கோர்ட்டு டவாலி போலவோ, அல்லது 5 ஸ்டார் ஓட்டல் வெயிட்டர் போலவோ தான் தெரிகிறார்கள்.. அகத்தின் அழகு ஆடையிலும் தெரியும்..

modi - 2026

திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அண்மைக் காலமாக செயல்பட்டு வரும் பாஜக.,வைச் சேர்ந்த தருண் விஜய், இதனைத் தமது டிவிட்டர் பதிவில் பாராட்டி பகிர்ந்திருந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமது டிவிட்டர் பதிவில், மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் தற்போது நடைபெற்று வரும் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி – சட்டை அணிந்து பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை உலகம் அறியட்டும்! – என்று பாராட்டியிருந்தார்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.