
விவேகானந்த கேந்திரத்தின் தலைவராக இருந்த பரமேஸ்வரன் நேற்று இரவு 10.30 மணி அளவில் காலமானார்.
ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரக்கும், விவேகானந்த கேந்திரா தலைவராக இருந்தவரும், பாரதிய விசார் கேந்திரா நிறுவனரும், சிறந்த சிந்தனையாளருமான பத்மபூஷன் பி. பரமேஸ்வரன் இறைவனடி சேர்ந்தார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த பிரசாரகர். சிறந்த இந்துத்துவ தத்துவவாதியாகத் திகழ்ந்தவர். வரலாற்று நிபுணர், தன் வாழ்நாளையெல்லாம் பாரத மாதாவின் காலடியில் சமர்ப்பித்து செயலாற்றி வந்தவர்

பாரதிய ஜன சங்கத்தின் அகில பாரத துணைத் தலைவராக இருந்தவர் பரமேஸ்வரன். இவர் தற்போது விவேகானந்த கேந்திரத்தின் அகில இந்தியத் தலைவராக இருந்து வந்தார். அவரது இழப்பு ஈடுசெய்ய இயலாத ஒன்று.