
அத்வானியை அழ வைத்துவிட்டது இந்த ஹிந்தி படம்! படத்தைப் பார்த்து விட்டு தேம்பித் தேம்பி அழுதார் அத்வானி. அவரை அருகில் சென்று கையைப்பிடித்து, படத்தின் இயக்குனர் தேற்றினார்!
விது வினோத் சோப்ரா இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாகி உள்ள படம் ”ஷிகாரா: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் காஷ்மீரி பண்டிட். ஆடில் கான், சாடியா நடித்துள்ளனர்!
1990களில் காஷ்மீரில், காஷ்மீரி இந்து பண்டிட்கள் இச்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் வெளியேற்றப் பட்ட சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். கூடவே ஒரு அழகிய காதல் கதையையும் இணைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர். கடந்த பிப்.7ம் தேதி முதல் திரைக்கு வந்துள்ளது இந்தப் படம்.
இப்படத்தின் சிறப்பு காட்சி பாஜக., மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பிரத்யேமாக திரையிட்டு காட்டப்பட்டது. படம் பார்த்து முடித்ததும் விது வினோத்தை பாராட்டிய அத்வானி, உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார். அவரை இயக்குனர் தேற்றினார். அத்வானி கண் கலங்கிய வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.