ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்! அதனால்…!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
karnool pattikonda market tomato - 2026

ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதனால் 50 டன் தக்காளிப் பழங்களை வீதியில் கொட்டினர்.

தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போலாயிற்று. ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்நூல் மாவட்டம் ‘பத்திகொண்ட’ மார்க்கெட்டில் வரிசையாக இரண்டாம் நாளாக தக்காளி விலை வீழ்ந்து விட்டது.

மதியம் 10 கிலோ தக்காளிக் கூடை 300 லிருந்து 400 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினார்கள். மாலைக்குள் காட்சி மாறியது. விலை ஒரேடியாக 30 ரூபாய்க்கு சரிந்தது. அதாவது ஒரு கிலோ ஒரு ரூபாய் ஆனது. அதனால் விவசாயிகளுக்கு வயிறு எரிந்தது.

வியாபாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தக்காளிப் பழங்களை சாலையில் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிகாரிகள் தலையிட்டு தாம் வாங்கிக் கொள்வதாக சமாதானப்படுத்தினார்கள்.

tomoto - 2026

மார்க்கெட்டிங் துறை ஜேடி சுதாகர் மார்க்கெட் யார்டுக்கு வந்து மீதியிருந்த தக்காளிகளை வியாபாரிகளை விட்டு வாங்கச் செய்தார். ஆனால் விலையை குறைத்த வியாபாரிகளை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் 50 டன் தக்காளியை மார்க்கெட்டில் வீசி எறிந்து தன் வேதனையை வெளிக்காட்டினார்.

மாலை 6 மணிக்குப் பிறகும் பல விவசாயிகள் லாரிகளில் தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்து வந்தார்கள். விலை குறைந்ததை அறிந்து ஏமாற்றம் அடைந்தார்கள். அதற்குள் வியாபாரிகள் தக்காளி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

அதனால், வாங்குவோரை எதிர்பார்த்து இரவு 7 மணி வரை விவசாயிகள் காத்திருந்தார்கள். ஆனால் ஐந்து லாரி சரக்கு நின்று விட்டது. திரும்பிச் செல்ல வழிச் செலவுக்குக் கூட பணமின்றி சில விவசாயிகள் வருந்தினர்.

கஷ்டப்பட்டு பயிரிட்ட தக்காளிக்கு கிலோ 10 ரூபாய் கூட கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் விட்டனர். கஷ்டப்பட்டு பார்த்துப் பார்த்து கவனித்து வளர்த்த தக்காளியை வீதியில் வீசி எறிந்து வருந்தினர்.

கர்னூல் மாவட்டம், தக்காளி சாகுபடிக்கு பெயர் போனது. மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர்களில் பிரதான பயிர் தக்காளி தான். தினமும் சுமார் 200 டன் தக்காளி பத்திகொண்ட மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். அங்கிருந்து பிற இடங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப் படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.