
வரகரிசி – மிளகு மினி இட்லி
தேவையானவை:
வரகரிசி. – 200 கிராம்,
பச்சரிசி. – 50 கிராம்,
முழு உளுந்து. – 100 கிராம்,
மிளகுத்தூள், அவல் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம். – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியுடன் அவல் சேர்த்துக் களைந்து ஊறவைக்கவும். வரகரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே ஊறவிடவும். அனைத்தும் 4 மணி நேரம் ஊறினால் போதும். எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து வைக்கவும். மாவு புளித்துப் பொங்கியவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.