மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் சிறுத்தைகள் இதர விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது.

ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் கட்டுபாட்டில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வனப்பகுதி, 484 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.2022 ஜனவரி முதல் வாரத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்க இருந்த நிலையில் தொடர் மழையால் கேமராக்கள் பொருத்த முடியாமல் போனது. இதனால் கணக்கெடுப்பு தாமதமானது.
இந்நிலையில் தற்போது கேமராக்கள் பொருத்தாமல் புலி, சிறுத்தை போன்ற பிற விலங்குகளின் இறைச்சிகளை உண்பவையின் கணக்கெடுப்பு பணி துவங்கி, நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பக பகுதியில் 40 பீட்டுகளிலும், உசிலம்பட்டி வனப்பகுதிகளில் 6 பீட்டுகளிலும் நடக்கும் இப்பணியில் வனச்சரக அலுவலர், வனப்பாதுகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட 130 பேருக்கும் மேற்பட்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.
வனவிலங்குகள் கால் தடம், எச்சம், நேரடி நடமாட்டம், மரங்களில் கால் நகம் பதிந்துள்ள தடயங்கள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.




