தமிழகம் முழுவதும் ஆவினின் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் டாஸ்மாக்கின் மதுபானங்களின் விலை உயர்வு குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் .அதில் தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’யை பெறுவது போல் தெரிகிறது’ என விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஆவின் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பாதாம் பால் பவுடர் 1 கிலோ ரூ.100, தயிர் லிட்டருக்கு ரூ. 6 வரையிலும் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்த விலை உயர்வு பலரையும் கவலையடைய செய்தது. இந்த நிலையில், இன்று (மார்ச் 7) மதுபானங்கள் விலையையும் ரூ.10 முதல் ரூ.80 வரை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இந்த விலையேற்றம் தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின், நெய் முதல் தயிர் வரை விலையை உயர்த்தியது ஆவின். டாஸ்மாக் குவார்ட்டர் பாட்டில் முதல் பீர் வரை விலையை உயர்த்துகிறது. திமுக வாக்குறுதியளித்தபடி, இறுதியாக தமிழகத்தில் ‘விடியல் ஆட்சி’யை பெறுவது போல் தெரிகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.





