ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துள்ள “அல வைகுண்டபுரமுலோ” என்ற படத்தில் வரும் “சாமஜவரகமன…” என்ற பாடல் அண்மையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பட பிரமோஷனின் ஒரு பகுதியாக வெளியான இப் பாடல் யூ டியூபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4 கோடி 30 லட்சம் பார்வைகள், 7 லட்சம் லைக்ஸ் என பெற்றுள்ளது.
மிக அதிக லைக்குகளை அள்ளிக் குவித்த தெலுங்கு பாடலாக சாமஜவரகமன சாதித்து வருகிறது. இந்த விஷயத்தை அல்லு அர்ஜுனே தெரிவித்துள்ளார்.
” அதிகம் பேர் லைக் செய்த தெலுங்குபாடல், உங்கள் அன்புக்கு தாங்க்ஸ்” என்று ‘Bunny’ டிவிட் செய்துள்ளார்.
திருவிக்ரம் டைரக்சனில் வெளிவரப்போகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகி. சுசாந்த், நிவேதா பெதுராஜ், டாபு, ஜெயராம்… முதலானோர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைப்பு. சித் ஸ்ரீராம் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அல்லு அரவிந்து, எஸ் ராதாகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இப்படம் பொங்கல் விடுதலையாக ஜனவரி 12 அன்று திரையரங்குகளைக் கலக்க வருகிறது.