உலகின் மிக நீளமான கொம்பு உள்ள பசு… இதான்!

சற்றுமுன்
cow big thron - 2026

மிகப் பெரிய கொம்பு கொண்ட பசுமாடு இதுவே. உலகிலேயே மிக நீளமான கொம்புகள் உள்ள பசு இது என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ஓக்லஹோமா (அமெரிக்கா) வில் லாடன் நகரில் மக்களை கவரும் இந்தப் பசுவுக்கு பகுல்ஹெட் என்று பெயர். இதன் கொம்பின் நீளம் 11 அடி 1.8 அங்குலம். இதன் வயது 6. விரைவில் இதனை கின்னஸ் புக் ரெக்கார்டில் சேர்ப்பதற்கு வேலை நடந்து வருகிறது.

2020 ஆம் ஆண்டில் இது கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டில் சேரப்போகிறது. பகுல்ஹெட் பசுவின் தற்போதைய உரிமையாளர் 14 வயது ‘மார்ஷியல் கோன்ஜெலன்’ என்ற பெண்.

cow big thron1 - 2026

5 ஆண்டுகளுக்கு முன் இந்த பசுவை அதன் ப்ரீடர்களிடமிருந்து 6 மாதக் குட்டியாக இருக்கும்போது இவரது பெற்றோர் வாங்கினர். தற்போது இவரது சகோதரன் லியாண்ட்ரோ இந்த பசுவை நாடெங்கும் அழைத்துச் சென்று கண்காட்சியாகக் காட்டி வருகிறார். வருடத்திற்கு 12 முதல் 15 இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகின்றனர்.

தற்போதுஅலபாமாவில் குட்வாட்டர் என்ற நகரை சேர்ந்த 7 வயது பசு கின்னஸ் ரெக்கார்டு செய்துள்ளது. பொன்சோவியா என்று அழைக்கப்படும் அந்த பசுவின் கொம்பு நீளம் 10 அடி 7.4 அங்குலம் அளவாம். எனவே பஹுல்ஹெட் அந்த சாதனையை முறியடிக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.