சென்னம்பாளையத்தில் எமதர்மருக்கு தீபாவளி சிறப்பு வழிபாடு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Yemadarmaraja temple - 2026

சென்னம்பாளையம் எமதர்மர் சுவாமிக்கு தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு

சிறுமுகை அருகேயுள்ள  சென்னம்பாளையம் கிராமத்தில் எமதர்மர் திருக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மூலவராக எமதர்மர் தெற்கு நோக்கி  அருள் பாலிக்கின்றார். இக்கோயில் வளாகத்தில் இன்பவிநாயகர், காலகாலேஸ்வரர் அருள் பாலிக்கின்றனர். 

தீபாவளிப் பண்டிகையையொட்டி எமதர்மர் சுவாமிக்கும், இன்ப விநாயகர் மற்றும் காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Yemadarmaraja temple2 - 2026

இந்த வழிபாட்டின் போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

சிறப்பு பூஜை முடிந்தப் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தகவல் மற்றும் படங்கள்: எஸ்.வி.பி.சரண்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.