![சாய்னா நேவால் வேடம்... சவால் விடும் பரிணீதி சோப்ரா! 1 saina](https://dhinasari.com/wp-content/uploads/2019/10/saina.jpg)
சாய்னா நெஹ்வால் ஆக மாறி விட வேண்டும்…! விளையாட்டு வீராங்கனை சாய்னா நெஹ்வாலின் பயோபிக் ரெடியாகி வருகிறது.
சாய்னா கதாபாத்திரத்தில் பரிணீதி சோப்ரா நடிக்கிறார். இதற்காக தினமும் இரண்டு மணிநேரம் பேட்மிட்டன் பயிற்சி எடுத்து வருகிறார்.
சாய்னாவை சந்தித்து அவருடைய யோசனைகளையும் எண்ணங்களையும் அறிந்து வருகிறார். தற்போது சாய்னா நெஹ்வாலின் வீட்டைச் சென்று பார்க்க உள்ளார் பரிணீதி.
“இந்த படத்திற்காக சாய்னா பாத்திரத்தை வெறுமனே நடிக்கப்போவதில்லை. முழுவதும் சாய்னாவாகவே மாறி விட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் வீட்டிற்குச் சென்று அவர் தினசரி வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக அறிய வேண்டும். நான் வருகிறேன் என்பதற்காக ஸ்பெஷலாக எதுவும் சமையல் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுவே எனக்கும் போதும் என்றும் அவர் குடும்பத்தாரிடம் கூறியுள்ளேன்” என்று பரிணீதி தெரிவித்தார்.
விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்தை அமோல் குப்தா இயக்க உள்ளார்.