இயக்குனர் ஆனது குறித்து ராதிகா ஆப்தே சொன்னது என்ன தெரியுமா?

சினி நியூஸ் சினிமா
radhika apte - 2026

இந்தி நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். இதற்குமுன் தோனி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் புதுப்படம் ஒப்புக்கொள்ளாத அவர், அரை மணி நேர படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்துக்கு ஸ்லீப் வாக்கர்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.

குல்சன் தேவய்யா, சஹானா கோஸ்வாமி நடித்துள்ளனர். இயக்குனரானது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில்,

‘இது வழக்கமான கதை கொண்ட படம் இல்லை. இந்த சமூகத்தை எதிர்த்து நியாயமான கேள்விகள் கேட்கும் வித்தியாசமான கதை கொண்ட படம். நான் இயக்குன ரானது திடீரென்று நடந்தது. ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்று இதன்மூலம் நான் கற்றுக்கொண்டேன்’ என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.