சாய்னா நேவால் வேடம்… சவால் விடும் பரிணீதி சோப்ரா!

Published:

saina - 2026

சாய்னா நெஹ்வால் ஆக மாறி விட வேண்டும்…! விளையாட்டு வீராங்கனை சாய்னா நெஹ்வாலின் பயோபிக் ரெடியாகி வருகிறது.

சாய்னா கதாபாத்திரத்தில் பரிணீதி சோப்ரா நடிக்கிறார். இதற்காக தினமும் இரண்டு மணிநேரம் பேட்மிட்டன் பயிற்சி எடுத்து வருகிறார்.

சாய்னாவை சந்தித்து அவருடைய யோசனைகளையும் எண்ணங்களையும் அறிந்து வருகிறார். தற்போது சாய்னா நெஹ்வாலின் வீட்டைச் சென்று பார்க்க உள்ளார் பரிணீதி.

“இந்த படத்திற்காக சாய்னா பாத்திரத்தை வெறுமனே நடிக்கப்போவதில்லை. முழுவதும் சாய்னாவாகவே மாறி விட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் வீட்டிற்குச் சென்று அவர் தினசரி வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக அறிய வேண்டும். நான் வருகிறேன் என்பதற்காக ஸ்பெஷலாக எதுவும் சமையல் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுவே எனக்கும் போதும் என்றும் அவர் குடும்பத்தாரிடம் கூறியுள்ளேன்” என்று பரிணீதி தெரிவித்தார்.

விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்தை அமோல் குப்தா இயக்க உள்ளார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img