காலாவதியான உணவுப் பொருட்கள் உண்டதால் வாந்தி மயக்கம்! பிரபல தியேட்டரில் சோதனை!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
vidhya theatre - 2026

தியேட்டரில் காலாவதியான உணவு பொருட்கள் விற்றதால் அதனை வாங்கி உண்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது

தாம்பரத்தில் இயங்கி வரும் வித்யா தியேட்டரில் சேலையூரைச் சேர்ந்த தீனா அவரது குடும்பத்தினருடன் நேற்று மாலை படம் பார்க்கச் சென்றுள்ளார்.

படத்தின் பிரேக் நேரத்தில் தின்பண்டங்கள் வாங்கலாம் என்று பாப்கார்ன் உள்ளிட்ட பல தின்பண்டங்களை வாங்கியுள்ளனர். தின்பண்டங்களைச் சாப்பிட்டு முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

vanthi - 2026

வீட்டிற்குச் சென்றவுடன், தீனா உள்ளிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் வந்துள்ளது. மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், ஃபுட் பாய்சன் ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தீனா உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். உடனே, அதிரடியாக வித்யா தியேட்டரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில், எக்ஸ்பைரி டேட் குறிப்பிடாமல் உணவுப் பொருட்கள் பாக்கெட் செய்யப் பட்டிருந்ததையும், தரமில்லாத பொருட்களை விற்பனை செய்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

food - 2026

மேலும், காலாவதியான 275 கிலோ பாப்கார்ன் மற்றும் குளிர்பானங்களைப் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, கெட்டுப்போன பொருட்களை அழித்து விட்டோம், இனிமேல் இவ்வாறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். மற்ற திரையரங்குகளிலும் சோதனை தொடரும் என்று தெரிவித்துள்ளார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.