ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
urad dal - 2026

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு – கால் கப்
துருவிய வெல்லம் – அரை கப்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி – 6
உலர்ந்த திராட்சை -10
தேங்காய் துருவல் – கால் கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
பால் – அரை லிட்டர்.

செய்முறை :

ulunthu payasam - 2026

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

கடாயில் நெய் விட்டு, அரைத்த உளுந்தைப் சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த உளுத்தம் பருப்புடன் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

பிறகு பாலின் பச்சை வாசனை போனதும் துருவிய வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து பாயசம் பதத்தில் வந்ததும் இறக்கிவிடுங்கள். சுவையான உளுத்தம் பருப்பு பாயாசம் தயார்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.